பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து இருக்கும் டான்ஸ் மாஸ்டர் அமீர் குழந்தைகள் காலில் விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் டான்ஸ் மாஸ்டர் அமீரின் வாழ்க்கை பதிவு, ஒட்டு மொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் கண்ணீரில் தத்தளிக்க வைத்தது. தந்தை முகம் பார்க்காமல், தாயின் அரவணைப்பில் வளர்ந்து, ஒரு கட்டத்தில் தாய் கொலை செய்யப்பட்ட போது அந்த கொலையாளியை நேராக சந்தித்தது என அமீரின் இளமை வாழ்க்கை முழுவதும் அத்தனை சோகம். பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கி, பசி பட்டினியால் வாடி அனாதை போல் வாழ்ந்த அமீரின் வாழ்க்கை கதையை கேட்டு பிக் பாஸ் போட்டியாளர்களும் சோகத்தில் வெடித்து அழுதனர்.
தாய் - தந்தை இல்லாமல், உணவு இல்லாமல் ரோட்டில் அலைந்து, பின்பு ஒரு வீட்டில் அடைக்கலம் அடைந்து அவர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டு அவர்கள் குழந்தைகளுக்கே டான்ஸ் மாஸ்டர் ஆகி விஜய் டிவி ‘கிங்க்ஸ் ஆஃப் டான்ஸ்’ நிகழ்ச்சியில் அமீர் ஜெயித்த கதை உண்மையில் போற்றக்கூடியது. நேற்று இரவு ஒளிப்பரப்பான எபிசோடில் அமீர் தனது வாழ்க்கை கதையை சொல்லி முடித்த பின்பு அவர் குறித்த தேடல்கள், அமீர் நடனம் ஆடிய வீடியோக்கள், அவர் கலந்து கொண்ட நடன போட்டி வீடியோக்கள் ஆகியவற்றை ரசிகர்கள் தேடி தேடி பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க.. சீரியலுக்கு வந்த பிறகு தேவயானியிடம் இப்படியொரு மாற்றமா? ஷாக்கில் ரசிகர்கள்!
அந்த வகையில் அமீர், கிங்க்ஸ் ஆஃப் டான்ஸ் இறுதி போட்டியில் தன்னை ஜெயிக்க வைத்த குழந்தைகளின் காலில் மேடையில் எல்லோர் முன்னிலையிலும் விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அந்த குழந்தைகள் ஜெயித்து, அவர்களின் மாஸ்டரான அமீரை பெருமைப்படுத்த, பிரபுதேவாவை அமீருடன் ஆட வைத்த அனைத்து நிகழ்வுகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவை பிக் பாஸ் ரசிகர்கள் அதிகம் தேடி பார்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லை ஆரம்பத்தில் பிக் பாஸ் அமீர் மீது ஏகப்பட எதிர்மறை விமர்சனங்கள் இருந்தது. பாவனி விஷயத்தில் அவரின் பழக்கவழக்கம் மிகவும் சர்ச்சைக்குள்ளானது.
இதையும் படிங்க... பாரதி கண்ணம்மா: கஷ்டப்படுவது கண்ணம்மா மட்டுமில்லை நாங்களும் தான்!
ஆனால் தற்போது அமீரின் வாழ்க்கை கதையை கேட்ட பின்பு பலரும் அமீர் ஃபேனாக மாறியுள்ளனர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் ஜெயிக்க வாய்ப்பு அதிகமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.