• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண் குழந்தையை கொன்றுவிட்டு தேடுவதுபோல் நாடகம்.. சிசிடிவியால் சிக்கிய குழந்தையின் பெரியம்மா.. என்ன நடந்தது? (வீடியோ)

பெண் குழந்தையை கொன்றுவிட்டு தேடுவதுபோல் நாடகம்.. சிசிடிவியால் சிக்கிய குழந்தையின் பெரியம்மா.. என்ன நடந்தது? (வீடியோ)

Youtube Video

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை காணாமல் போய் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் பெரியம்மாவே குழந்தையை கிணற்றில் வீசிக் கொலை செய்தது ஏன்? சிசிடிவியால் பெரியம்மா சிக்கியது எப்படி?

  • Share this:


    ராணிப்பேட்டை மாவட்டம் செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் 42 வயதான காந்தி. கட்டிடதொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கு 12 வயதில் தனுசு என்ற மகன் உள்ளார். மூன்றரை வயதில் கோபிகா என்ற பெண் குழந்தை இருந்தது. திங்கள் கிழமை மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கோபிகா காணாமல் போனார்.

    உறவினர்கள் தேடிய நிலையில், வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் பார்த்துள்ளனர். அதில் ஒரு பெண், குழந்தையை தூக்கிச் செல்வது பதிவாகியிருந்தது. சில நிமிடங்களில் அதே பெண், குழந்தை இல்லாமல் தனியாக வருவதும் பதிவாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், ராணிப்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, அதில் பதிவாகியிருந்த பெண், காந்தியின் அண்ணன் சேட்டின் மனைவியும், குழந்தையின் பெரியம்மாவுமான 36 வயது ராணி எனத் தெரியவந்தது.

    ஆனால் ராணியும் உறவினர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடுவது போல் நடித்துள்ளார். விசாரணை தொடங்கியபோது, திடீரென மயங்கி விழுந்து நாடகம் போட்டார் ராணி. வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஒன்றுமில்லை எனத் தெரியவந்ததும் போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கினர்.

    மேலும் படிக்க.. கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என கேரள முதல்வர் தகவல்..

    முதலில் மறுத்த ராணி, சிசிடிவி காட்சிகளைக் காட்டியதும் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அவரது கணவர் சேட்டிற்கும் அவரது தம்பியான காந்திக்கும் சொந்தமான பூர்வீக வீடு உள்ளது. அந்த வீடு மற்றும் சொத்தை பிரித்துக்கொள்வதில் இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    அதனால் ஆத்திரத்தில் காந்தி குடும்பத்தை பழிவாங்க அவரது மூன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார் ராணி. ராணி குழந்தையை வீசியதாக காட்டிய கிணற்றில் ஏழு மணிநேர போராட்டத்திற்கு பிறகு சேற்றில் சிக்கியிருந்த குழந்தையின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். கொலைவழக்குப் பதிவு செய்த போலீசார் ராணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




     

    சொத்து பிரச்னைக்காக பிஞ்சு பெண் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: