முந்திய சுயேட்சை வேட்பாளர்… அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சி...!

முந்திய சுயேட்சை வேட்பாளர்…  அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சி...!
சீமான் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: October 24, 2019, 6:54 PM IST
  • Share this:
கடந்த மக்களவை தேர்தலில் சராசரியாக 3.90% வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, தமிழகம், புதுவையில் தற்போது நடந்த மூன்று தொகுதி இடைத்தேர்தலில் 2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. நாங்குநேரியில் சுயேட்சை வேட்பாளரை விட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8 தொகுதிகளில் 5 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. சிவகங்கை, திருச்சி, ஸ்ரீபெரும்பதூர், வடசென்னை தொகுதியில் 6 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் தமிழகம், புதுவையில் நடந்த மூன்று தொகுதி இடைத்தேர்தலிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. மூன்று தொகுதிகளிலும் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். தேர்தல் பரப்புரையில் ராஜீவ்காந்தி கொலை குறித்து இவர் பேசிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது.


இந்த பரபரப்புகளுக்கு இடையே, தேர்தல் முடிவுகளில் நாம் தமிழர் கட்சி கடும் பின்னடவைச் சந்தித்துள்ளது. மூன்று தொகுதிகளிலும் சொற்ப வாக்குகளை மட்டுமே நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 1.55 சதவிகித வாக்குகளை மட்டுமே நாம் தமிழர் கட்சியால் முடிந்தது.

நாங்குநேரி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பனங்காட்டுப்படை கட்சியின் வேட்பாளர் ஹரி நாடார், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட 249 வாக்குகள் அதிகம் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்தார். இது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கட்சி துவங்கி 6 மாத கால கட்டத்தில் அதிக வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரி நாடார் கூறியிருக்கிறார்.நாடாளுமன்றத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்ற சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, இப்போது குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது சீமானை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading