Home /News /tamil-nadu /

இரவில் சைக்கிளில் சென்று ஆய்வு: ஐபிஎஸ் ரம்யா பாரதிக்கு முதல்வர் பாராட்டு!

இரவில் சைக்கிளில் சென்று ஆய்வு: ஐபிஎஸ் ரம்யா பாரதிக்கு முதல்வர் பாராட்டு!

இரவு நேரத்தில் பணியில் இருந்த காவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ரம்யா பாரதி ஐ.பி.எஸ் நள்ளிரவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் பணியில் இருந்த காவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ரம்யா பாரதி ஐ.பி.எஸ் நள்ளிரவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் பணியில் இருந்த காவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ரம்யா பாரதி ஐ.பி.எஸ் நள்ளிரவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நள்ளிரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    சென்னை வடக்கு இணை ஆணையராக இருந்து வருபவர் ரம்யா பாரதி ஐ.பி.எஸ். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தனியாக சைக்கிளில் சென்று வடக்கு மண்டல பகுதிகளையும், காவல் நிலையங்களையும் ஆய்வு செய்தார். ஐபிஎஸ் ரம்யா பாரதி சரியாக இரவு 2.45 மணிக்கு ஆரம்பித்து 4.30 மணி வரை வடக்கு மண்டல பகுதிகள் மற்றும் காவல் நிலையங்களை ஆய்வு செய்தார்.

    வாலாஜா சாலை முத்துசாமி பாலத்தில் ஆரம்பித்து எஸ்பிளனேட் சாலை, மின்ட் தெரு, மூலக்கொத்தளம் பகுதி வழியாக வைத்தியநாதன் பாலத்தைக் கடந்து தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். மேலும் கோட்டை காவல் நிலையம், எஸ்பிளனேட் காவல்நிலையம், பூக்கடை காவல் நிலையம், யானைக்கவுனி காவல் நிலையம், வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், ஆர்.கே நகர் காவல் நிலையம், புதிய வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், தண்டையார்பேட்டை காவல் நிலையம் ஆகிய 8 காவல் நிலையங்களுக்கு திடீர் விசிட் செய்து காவலர்களின் இரவு நேர பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    Also read... முன்னாள் அமைச்சரின் மகனிடம் ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி

    மேலும், இப்பகுதிகளில் சைக்கிளில் சென்றபோது இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள், இரவு நேர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். காவலர்கள் மற்றும் இரவு நேரத்தில் பணியில் இருந்த காவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான ரம்யா பாரதி ஐ.பி.எஸ் நள்ளிரவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    நள்ளிரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதியின் இந்த செயலை காவல்துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

    அந்தவகையில், ஐபிஎஸ் ரம்யா பாரதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன்.

    தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி