தமிழகத்தில் போகிப் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

தமிழகத்தில் போகிப் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்
  • Share this:
தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். பயனற்ற பொருட்களை எரித்ததால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்திரன் முதலியோரை வணங்கி திருப்தி செய்யும் நாள், போகியாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் போகிப் பண்டிகையை வீடுகள்தோறும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். அதன்படி தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பயனற்ற பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை மக்கள் வரவேற்றனர்.


First published: January 14, 2020, 8:05 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading