ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி காலமானார் : பிரபலங்கள் இரங்கல்

பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி காலமானார் : பிரபலங்கள் இரங்கல்

வயது முதிர்வு காரணமாக மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி இன்று காலை 9 மணி அளவில் காலமானார்.

வயது முதிர்வு காரணமாக மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி இன்று காலை 9 மணி அளவில் காலமானார்.

வயது முதிர்வு காரணமாக மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி இன்று காலை 9 மணி அளவில் காலமானார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாரதியின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாரதியாரின் மூத்தமகள் தங்கம்மாவின் மகளான லலிதா பாரதி, வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் காலமானார். இந்த நிலையில்  அவருடைய உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இசையை முறையாகக் கற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கியவர் லலிதா பாரதி. பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பாரதியார் பாடல்களை இசை மற்றும் நூல் வடிவில் பரப்புவதிலும் முக்கிய பங்கு கொண்டிருந்தார்.

இவரது மகன் ராஜ்குமார் பாரதி கர்நாடக இசைப் பாடகர். இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சில திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். அவரின் திடீர் மறைவு பலரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லலிதா பாரதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிறந்த கவிஞரும், இசையாசிரியரும், மகாகவி பாரதியாரின் மகள் வயிற்றுப் பேத்தியுமான லலிதா பாரதி இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு வருத்தமுற்றேன்.

லலிதா குமாரி 40 ஆண்டுகளாக இசையாசிரியராக பணியாற்றியவர் என்பதோடு, பாரதியார் பாடல்களை இசை வடிவில் பரப்பும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். தலைசிறந்த தமிழ் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லலிதா பாரதி மறைவால் வாடும் அவர்தம் உறவினர்கள், தமிழார்வலர்கள் உள்ளிட்டோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published: