Home /News /tamil-nadu /

பொய் வழக்குகளால் மாற்றுக் கருத்துடையவர்களை மௌனமாக்குவது சரியல்ல! பாரதிராஜா ஆதங்கம்

பொய் வழக்குகளால் மாற்றுக் கருத்துடையவர்களை மௌனமாக்குவது சரியல்ல! பாரதிராஜா ஆதங்கம்

பாரதிராஜா

பாரதிராஜா

அரசை விமர்சித்தால் தேச விரோதி, நகர்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என்று தங்களுடைய கவலையை தானே குறிப்பிட்டு குறிப்பிட்டிருந்தார்கள்.

  • News18
  • Last Updated :
    கலைஞர்கள் தங்கள் கருத்துகளை பொதுவெளியில் பேசக் கூடாது என்று அச்சுறுத்துவது பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்கள் மௌனமாக்க முயல்வதும் ஏற்கத்தக்கதல்ல என்று பாரதி ராஜா தெரிவித்துள்ளார்.

    கும்பல் தாக்குதல்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 49 ஆளுமைகள் மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து பாரதி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இயக்குனர் மணிரத்தினம், அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசவிரோத குற்றச்சாட்டு பதிவு செய்ததற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது அதிகரித்துள்ளது.

    அரசை விமர்சித்தால் தேச விரோதி, நகர்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என்று தங்களுடைய கவலையை தானே குறிப்பிட்டு குறிப்பிட்டிருந்தார்கள். இதற்காக தேசவிரோத வழக்குப் பதிவு செய்வதை ஏற்க முடியாது. அரசு சார்பில் பேசியவர்கள் மத்திய அரசுக்கு தொடர்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாகவும் பதிவு செய்ய வேண்டும்.

    பொதுவெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவது; பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்களை மௌனமாக முயல்வதும் ஏற்கத்தக்கதல்ல. ஆகவே மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Bharathiraja

    அடுத்த செய்தி