உத்வேகத்துடன் பணியாற்றினால் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குத்தாரப்பள்ளியில் புதியதாகக் கட்டுப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை, திருச்சி, தேனி, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பாஜக மாவட்ட அலுவலகங்களை அவர் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடி அறிவித்த சிறப்பான திட்டங்களின் எதிரொலியாகதான் திரிபுராவில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள பாஜக தொண்டர்கள் அனைவரும் திறமையாகச் செயல்பட்டு வருவதாகக் கூறிய ஜெ.பி.நட்டா கூடிய விரைவில் தமிழ்நாட்டில் தாமரை மலரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “பாஜக கட்சியில் 18 கோடிக்கும் அதிகமாக தொண்டர்கள் இருப்பதால் தான் இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக பாஜக உள்ளது. மோடி அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
மற்ற கட்சிகளைப் போல வாரிசு அரசியல் செய்யும் கட்சியாக பாஜக இல்லை. மக்களுக்கான நேரடி ஆட்சி செய்யும் கட்சியாக பாஜகவை மோடி வளர்த்து வருகிறார்.
சமீபத்தில் 420 விமானங்கள் வாங்கிருப்பது இந்தியாவிற்க்கு மிகப்பெரிய பொருளாதார மாற்றம் வரப்போகிறது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து மொபைல் போனிலே இறக்குமதி செய்தோம் ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு மொபைல் போன்களை ஏற்றுமதி செய்து வருகிறோம்.
உலகத்திலேயே இந்தியாவில் தான் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இதைக் கொண்டு வந்தது பாஜக தான். தமிழகத்தில் 40 ஆண்டு காலம் எந்த கட்சிகளும் கொண்டு வராத ரயில்வே திட்டங்களை கடந்த 9 ஆண்டுகளில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் தமிழ் மக்களின் பெருமையை கொண்டு சேர்ப்பதற்காக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க : பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட்..!? வெளியானது புதிய தகவல்!
தமிழ் மொழிக்கு மரியாதை கொடுத்திருப்பதால் தான் தமிழ்நாட்டுக்கு பல புதிய திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் செலுத்தும் விதமாக திருவள்ளுவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.