சின்னத்திரை பிரபலங்கள் எப்போதுமே சமூக ஊடகங்களில் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதிலும் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ட்ரெண்டிங் போட்டோஷூட் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் வெளியிடும் புகைப்படங்கள், போட்டோஷூட், வீடியோக்கள் எப்போதும் வைரலாக கூடியவை. சின்னத்திரையில் பல சாதனைகளை படைத்த சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல். இன்று வரை பல இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியல் இது.
சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீரியலில் ஹீரோயின் கதாபத்திரத்தில் நடித்திருந்த ரோஷினி திரைப்பட வாய்ப்பின் காரணமாக பாரதி கண்ணம்மாவில் இருந்து விளக்கினார். அதே போல ரோஷினிக்கு முன்னதாக, அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரும் அந்த சீரியலில் இருந்து விலகினார். இவர்கள் இருவருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது.
இவர்களை போலவே பாரதி கண்ணாம்மா சீரியலில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை கண்மணி. இவர் இந்த சீரியலில் அஞ்சலி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அவ்வபோது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட பீச் போட்டோஷூட் மிகவும் வைரலாகி வருகிறது. இவரின் ரசிகர்கள் இந்த பதிவை பார்த்துவிட்டு பல கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
ALSO READ | பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்...
நீல நிற ஆடையில் நடிகை கண்மணி வெளியிட்ட புகைப்படம் மற்றும் பீச் வீடியோ பார்ப்பதற்கு உண்மையில் அழகாக உள்ளது. இந்த பீச் போட்டோஷூட் வீடியோவில் 'ரம் பம் பம்' பாடலை சேர்த்து எடிட்டிங் செய்து பதிவிட்டுள்ளார். அந்த நீல நிற ஆடையுடன் உள்ள வீடியோவுடன் இந்த பாடலை எடிட் செய்த விதம் சிறப்பாக உள்ளது என இவரின் ரசிகர்கள் கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளனர். இந்த பீச் போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பல ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். மேலும் நுற்றுக்கணக்கில் கமெண்ட்கள் வந்தவண்ணம் உள்ளது.
View this post on Instagram
நடிகை கண்மணியின் இந்த போட்டோஷூட் பதிவில் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "நீங்கள் பார்ப்பதற்கு அழகிய பொம்மை போன்று உள்ளீர்கள்" என்று வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார்.
View this post on Instagram
மற்றொரு நபர், "நான் உங்களின் பெரிய ரசிகர். நீங்கள் மிகவும் அழகாக இருக்குறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
ALSO READ | தங்கம் போல் ஜொலிக்கும் ரைசா வில்சன்...
பாரதி கண்ணம்மா சீரியல் தான் நடிகை கண்மணி நடித்த முதல் சீரியல். அதற்குள்ளாகவே இவருக்கென்று ரசிகர் பட்டாளம் தொடங்கி விட்ட விஷயம் சிறப்பானது. இவர் அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருவதால் பெண் ரசிகைகளும் அதிகமாகி வருகின்றனர். காரணம் ஸ்கின் கேர் டிப்ஸ், ஹேர் கேர் டிப்ஸ், டயட் டிப்ஸ் போன்ற பல்வேறு பியூட்டி மற்றும் ஹெல்த் டிப்ஸை இவர் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.