Bharat Bandh | முழு அடைப்பு போராட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்..

கோப்புப் படம்

1 லட்சம் போலீசார் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் 7000 போலீசார் ஈடுபட உள்ளனர்.

  • Share this:
    வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடந்துவருவதையொட்டி அறிவிக்கப்பட்டிருக்கும் முழு அடைப்பு போராட்டம் தமிழகத்திலும் ஆதரவைப் பெற்றள்ளது. 1 லட்சம் போலீசார் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் 7000 போலீசார் ஈடுபட உள்ளனர்.

    மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முற்றுகையிட்டு கடந்த 26-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிற விவசாயிகள் நாளை நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளதால் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த உள்ளனர்.

    குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள்,விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் பந்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    முழு அடைப்பின் போது பொதுமக்களுக்குண்டான அத்தியாவசிய பொருட்கள் தடைபடாமல் கிடைக்கவும், எந்தவிதமான அசாம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக சென்னையில் 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.


    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Gunavathy
    First published: