Bharat Bandh | முழு அடைப்பு போராட்டம்: புதுச்சேரியில் கடைகள் அடைப்பு அரசு, தனியார் பேருந்து, ஆட்டோ இயக்கப்படவில்லை

Bharat Bandh | முழு அடைப்பு போராட்டம்: புதுச்சேரியில் கடைகள் அடைப்பு அரசு, தனியார் பேருந்து, ஆட்டோ இயக்கப்படவில்லை

புதுச்சேரி

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, புதுச்சேரியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

  • Share this:
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 13வது நாளை எட்டியுள்ள நிலையில், நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மத்திய அரசுடன் ஏற்கெனவே 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில்,  இன்று புதுச்சேரியில் அதிமுக-பாஜக தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆளுங்கட்சி ஆதரவுடன் முழு அடைப்பு நடப்பதால், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன .

மேலும் படிக்க...Bharat Bandh | முழு அடைப்பு போராட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்..

அசம்பாவிதங்களை தவிர்க்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்படுகின்றன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: