• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 144 ஆண்டுகளுக்கு பின் தாமிரபரணி புஷ்கரம் விழா கோலாகலமாக தொடங்கியது!

144 ஆண்டுகளுக்கு பின் தாமிரபரணி புஷ்கரம் விழா கோலாகலமாக தொடங்கியது!

பரணி மகா ஆரத்தி விழா கொண்டாட்டம்

பரணி மகா ஆரத்தி விழா கொண்டாட்டம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    நெல்லை தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கரம் விழாவின் முதல் நாள் நிறைவாக, பரணி மகா ஆரத்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார்

    144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நெல்லை தாமிரபரணி புஷ்கரம் விழா, நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. விழா தொடங்கியதுமே எண்ணற்ற பக்தர்கள், தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர்.  முதல் நாள் நிறைவாக, பாளையங்கோட்டையை அடுத்துள்ள அருகன்குளம் ஜடாயு தீர்த்தக்கட்டத்தில், பரணி மகா ஆரத்தி விழா சிறப்பாக நடைபெற்றது. மங்கள இசை முழங்க இந்நிகழ்ச்சி தொடங்கியது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார்.

    விழாவிற்காக, சண்டி ஹோமத்தில் பூஜைசெய்யப்பட்ட தங்கக்குடத்தின் புனித நீரானது, தாமிரபரணி ஆற்றில் ஊற்றப்பட்டது. அப்போது ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் புனித நீராடினர். கங்கை , ரிஷிகேஷ் போன்ற இடங்களில் நடப்பது போன்று, ஆற்றங்கரை தீர்த்தக்கட்டத்தில் ஏழு மேஜைகள் அமைக்கப்பட்டு,  மகா பரணி தீப மங்கள ஆரத்தி,  தாமிரபரணி நதிக்கு எடுக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எண்ணற்ற பக்தர்களுள் ஒருவராக ஆளுநரும் கலந்துகொண்டு வழிபாடு செய்தார். முன்னதாக, அங்குள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலுக்கும் சென்று ஆளுநர் வழிபாடு நடத்தினார். அப்போது கோவில் நிர்வாகத்தின் சார்பில் 144 ஆண்டுகளை குறிக்கும் வகையில், அவருக்கு 144 கிலோ எடையிலான லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகோரிகள், துறவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: