Home /News /tamil-nadu /

மாற்றுத்திறனாளிகளின் வலி தெரியுமா? பாக்யராஜ் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

மாற்றுத்திறனாளிகளின் வலி தெரியுமா? பாக்யராஜ் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

பாக்யராஜ் கருத்துக்கு எதிர்ப்பு

பாக்யராஜ் கருத்துக்கு எதிர்ப்பு

 பாக்யராஜ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரும் சமூக மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வலருமான தீபக் நாதன், தனது ட்விட்டர் பக்கத்தில், அரசியலில் உங்கள் எதிரிகளை விமர்சிக்க ஏன் ஊனத்தை கையிலெடுக்கிறீர்கள்? மாற்று திறனாளிகளை ஏன் இழிவுப்படுத்த விரும்புகிறீர்கள்? நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா? எங்களுக்கும் மான உணர்ச்சி உண்டு ஐயா என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களை மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு  இயக்குநர் பாக்யராஜ் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட,  திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

    இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பாக்யராஜ், பிரதமரை வெளிநாடு செல்கிறார் என  குறை சொல்லிக்கொண்டே  இருக்கிறார்கள். ஆனால் இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி செல்கிறார் ? அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார் என பார்ப்பேன். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை.

    இக்கட்டான சூழல் வரும் போது சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள் என்று பேசியிருந்தார்.  அவரது பேச்சு அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியுள்ளதாக எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

    இதையும் படிங்க: மோடியை போன்றவர்கள் நாட்டுக்கு தேவை.. பிரதமரை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்: பாக்யராஜ் பேச்சு


    இது தொடர்பாக டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரும் சமூக மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வலருமான தீபக் நாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாற்றுத்திறனாளிகள் குறித்த பாக்யராஜ் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். அரசியலில் இருப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளை மதிக்க விரும்புவதில்லை. முதிர்ச்சியடையாமல் பிறந்த குழந்தைகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும். உங்கள் அரசியல் லாபத்திற்காக எங்களை ஏன் கேவலப்படுத்த வேண்டும்.

    மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி ! அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா நடிகர் பாக்கியராஜ் அவர்களே? அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி.

    மேலும் படிக்க: ஆளுநர் வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்


    அரசியலில் உங்கள் எதிரிகளை விமர்சிக்க ஏன் ஊனத்தை கையிலெடுக்கிறீர்கள்? மாற்று திறனாளிகளை ஏன் இழிவுப்படுத்த விரும்புகிறீர்கள்? நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா? எங்களுக்கும் மான உணர்ச்சி உண்டு ஐயா! தொடர்ந்து அரசியல்வாதிகள் புண்படுத்துகிறார்கள். உளவியல் சமூக குறைபாடுகளை மதிக்கவும்’ என்று பதிவிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bhagyaraj, Director Bhagyaraj

    அடுத்த செய்தி