தமிழகத்தில் தீவிரவாதத் தாக்குதல்? எச்சரிக்கை விடுத்த கர்நாடக காவல்துறை

சென்னையிலுள்ள சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் தீவிரவாதத் தாக்குதல்? எச்சரிக்கை விடுத்த கர்நாடக காவல்துறை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: April 26, 2019, 10:19 PM IST
  • Share this:
தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று பெங்களூரு காவல்துறையினர் தமிழக அரசுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சென்னையிலுள்ள சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.


இந்தநிலையில், தமிழக அரசுக்கு பெங்களூரு காவல்துறையினர் எச்சரிக்கைவிடுத்து கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், ‘தமிழகத்தில் ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும் குண்டு வெடிப்பு நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையடுத்து, ரயில்வே டி.ஜி.பி, சிறப்பு டி.ஜி.பி, ஐ.ஜிக்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Also see:

First published: April 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading