மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர்தான் செந்தில் பாலாஜி – அமைச்சர் தகவல்

அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுக, திமுகவில் ஆரம்பத்திலிருந்து இருப்பவர்கள் கட்சி மாற மாட்டார்கள் என்றார் கடம்பூர் ராஜூ.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் செந்தில் பாலாஜி என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: செந்தில் பாலாஜி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர். மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதற்கு அவரே உதாரணம்.

  அதிமுக, திமுகவில் ஆரம்பத்திலிருந்து இருப்பவர்கள் கட்சி மாற மாட்டார்கள். ஆகையால்தான் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

  சதி செய்து யாரும், யாரையும் முடக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை கொலை செய்யக் கூட முயற்சி நடைபெற்றது. ஆனால் அதையும் மீறி இருவரும் கட்சியை வளர்த்தனர். சதி என்பது அரசியலில் இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி வெற்றி பெற்று இயக்கத்தை வளர்ப்பதுதான் தலைவர்களின் கடமை.

  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றார் கடம்பூர் ராஜூ.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: