பீலா ராஜேஷ் பேசிய வீடியோ... சென்னை தொழிலதிபர் மீது வழக்கு...!

Youtube Video

சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கும்படி, கடந்த 25 -ம் தேதி ஸ்ரீராமை போலீசார் எச்சரித்தனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு எதிராக வீடியோ பதிவிட்டதாக தொழிலதிபர் மீது சென்னை சைபர் க்ரைம்போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு கருத்து சுதந்திரம் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.
  சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீராம், "ஸ்ரீராம் மெட்ராஸ்" என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு வைத்துள்ளார்.  சுகாதாரச் செயலாளர் பீலா ராஜேஷ் பேசியதாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு வீடியோ இடுகை தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

  தமிழகத்தில் முதன் முதலாக, கொரோனா தொற்று எப்போது உறுதியானது என்பது குறித்து, பீலா ராஜேஷ் தனது வெவ்வேறு பேட்டிகளில் சொன்னதை துண்டாக்கி, சிறிய வீடியோவாக ஸ்ரீராம் பதிவிட்டிருந்தார்.

  சுகாதாரச் செயலாளருக்கு எதிரான ட்விட்டரில் கருத்து வெளியிட்ட ஸ்ரீராம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி சென்னை போலீசில் புகார் அளித்தார்.

  சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கும்படி, கடந்த 25 -ம் தேதி ஸ்ரீராமை போலீசார் எச்சரித்தனர். ஸ்ரீராம் அதனை நீக்காததால், அவர் மீது 3 பிரிவுகளில் சென்னை சைபர் க்ரைம் போலீசர் வழக்குப்பதிவு செய்தனர்.

  ஸ்ரீராம் இப்போது அந்த வீடியோப்பதிவை மீள்பதிவு செய்துள்ளதுடன், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை சுதந்திரம் என்று பதிவிட்டுள்ளார். மேலும், வாட்ஸ் அப்பில் தனக்கு பார்வேடு செய்யப்பட்ட வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டதாகவும் ஸ்ரீராம் விளக்கம் அளித்துள்ளார்.

  இந்த விவகாரம் தொடர்பாக வரும் 30-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று ஸ்ரீராமுக்கு ட்விட்டர் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.

  ஸ்ரீராமுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள விவகாரம் கருத்து சுதந்திரம் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக இதுவரைக்கும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  ராமநாதபுரத்தை சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் முகநூலில் சுகாதாரத்துறை செயலாளருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா குறித்து தவறான தகவல்களை பீலா ராஜேஷ் அளிப்பதாக அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சியின் தலைவருமான சுப. உதயகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

  சுப.உதயகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் கோட்டார் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: