விமான நிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள ரோபோ பயன்படாமல் கிடக்கும் அவலம்!
விமான நிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள ரோபோ பயன்படாமல் கிடக்கும் அவலம்!
கோப்புப் படம்
பயணிகளின் பயன்பாட்டுக்கு ரோபோக்கள் வந்தவுடன் அவற்றுக்கு சரியான மொழிகள் தெரியவில்லை என்றும், அவற்றால் எந்த பயனும் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மொழிப் பிரச்னை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ரோபோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக விமான சேவை மையத்தில் ரோபோக்களை பயன்படுத்தலாம் என விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து பெங்களூரில் இருந்து 2 ரோபோக்கள் கொண்டு வரப்பட்டு விமான நிலையத்தில் பயன்பாட்டில் வைக்கப்பட்டன.
இதுகுறித்து சென்னை விமான நிலைய ஆணைய இயக்குநர் சந்திரமவுலி கூறுகையில் ‘விமான நேரம், பாதுகாப்பு சோதனை, டிக்கெட் பரிசோதனை உள்ளிட்டவை தொடர்பான சந்தேகங்களுக்கு ரோபோக்கள் பதிலளிக்கும். பயணிகளுக்கு மிகவும் உதவியாக இந்த ரோபோக்கள் செயல்படும்’ என்று கூறியிருந்தார்.
பயணிகளின் பயன்பாட்டுக்கு ரோபோக்கள் வந்தவுடன் அவற்றுக்கு சரியான மொழிகள் தெரியவில்லை என்றும், அவற்றால் எந்த பயனும் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ரோபோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட ரோபோக்கள், தற்போது ஓரமாக வைக்கப்பட்டுள்ளன.
Also watch
Published by:DS Gopinath
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.