சட்டசபையில் துப்புரவு பணிக்கு பி.இ, எம்.பி.ஏ பட்டதாரிகள் விண்ணப்பம்!
இந்த துப்புரவு பணிக்கு மாதம் 17 ஆயிரம் வரை ஊதியமாக கிடைக்கும். மேலும், அரசின் இதர பலன்கள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
news18
Updated: February 5, 2019, 10:08 AM IST
news18
Updated: February 5, 2019, 10:08 AM IST
தமிழக சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியாளர் இடத்துக்கு, சுமார் 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில் அவர்களில் பெரும்பாலோனோர் பட்டதாரிகள் ஆவர்.
தமிழக சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியாளர் இடத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது வரை சுமார் 4 ஆயிரம் பேர் இந்தப் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.இந்தப்பணிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எழுதப்படிக்க தெரிந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோனோர் பி.இ, எம்.பி.ஏ மற்றும் கலை & அறிவியல் பட்டதாரிகள் ஆவர். மேலும், டிப்ளமோ, ஆசிரியர் பயிற்சி படித்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை என்பதால், எந்த வேலை கிடைத்தாலும் செய்வதற்கு, பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தயாராக உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. இந்த துப்புரவு பணிக்கு மாதம் 17 ஆயிரம் வரை ஊதியமாக கிடைக்கும். மேலும், அரசின் இதர பலன்கள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also See...

Loading...