முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிபிசி ஆவணப்படம்.. நீட் தேர்வு.. திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்..!

பிபிசி ஆவணப்படம்.. நீட் தேர்வு.. திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்..!

இளைஞரணி நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இளைஞரணி நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் செயல்பட வேண்டிய விதம் குறித்து திமுக எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பட்ஜெட் உரை, குடியரசுத் தலைவர்  உரை  குறித்து  விவாதிக்கப்பட்டது.  மேலும் திமுக சார்பில்  எடுத்து  வைக்கப்பட  வேண்டிய முக்கியப் பிரச்னைகள் கறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு  தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்தும் அகில  இந்திய  அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள 2002ஆம் ஆண்டு நடந்த  குஜராத் வன்முறை குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப் பட சர்ச்சை குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை மற்றும் குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்றகருத்துகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் உறுதியான விவாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும்,“நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது,மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, சேது சமுத்திரத் திட்டம், என்.எல்.சி  வேலைவாய்ப்பில்  தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது,  இலங்கை  தமிழர்களுக்கு  அதிகார பகிர்வு அளிப்பது” உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பவும் அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

First published:

Tags: CM MK Stalin, DMK, Neet