குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு.... சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

news18
Updated: August 14, 2019, 7:44 AM IST
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு.... சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
குற்றாலம்
news18
Updated: August 14, 2019, 7:44 AM IST
குற்றால மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குற்றால மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் வருவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

தென்காசி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். .பிரதான அருவியான குற்றால மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

Also watch

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...