பேனர் விவகாரம் : மோடியிடம் வேண்டுகோள் வைத்த கமல்ஹாசன்

பேனர் விவகாரம் : மோடியிடம் வேண்டுகோள் வைத்த கமல்ஹாசன்
கமல் ஹாசன்
  • News18
  • Last Updated: October 2, 2019, 5:29 PM IST
  • Share this:
நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ்ந்து இந்த பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்தியா - சீனா இடையிலான வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தின் மாமல்லபுரத்துக்கு வருகை தரவுள்ளனர். இந்த சந்திப்பு வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது.

தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.


இந்தச் சூழ்நிலையில், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் தகவல் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9-ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்நிலையில் பேனர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “தமிழகமும், தமிழர்களும் சுபஸ்ரீ இழப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், உங்கள் வருகைக்கு பேனர்கள் வைக்க தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.ஒருவேளை பிரதமரான நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ்ந்து முதலில் இந்த பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என்றால், அது தமிழர்களின் உணர்வை நீங்கள் பிரதிபலிப்பதாக அமையும். அதேசமயம் உங்களுக்கும் பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்க்கும்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி!

First published: October 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading