சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் சுபஸ்ரீ என்ற பி.டெக் படித்தவர். ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய அவர் கடந்த 12-ஆம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண விழா பேனர், சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலைதடுமாறிய அவர் மீது பின்னால் வந்த லாரி மோதியது.
படுகாயமடைந்த சுபஸ்ரீயை அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயன்றும் அவர் உயிரிழந்தார். கனடா செல்வதற்காக தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த நிலையில், அவர் சாலை விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
ஜெயகோபால் மற்றும் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்த நிலையில், பேனர் வைக்க அனுமதித்த பள்ளிக்கரணை ஆய்வாளர், பரங்கிமலை போக்குவரத்து ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கடந்த 15 நாட்களாக தலைமறை இருந்தார்.
இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Watch also:
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.