விவசாயத்திற்கான கடன் உதவியை வங்கிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும் - முதலமைச்சர்

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிகள் தாராளமாக கடன் உதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 • Share this:
  சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில அளவிலான வங்கி குழு கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, ரிசவர் வங்கி மண்டல இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். தமிழகத்தில் வங்கிகளில் கடன் வைப்பு தொகை 100 விழுக்காட்டை விட கூடுதலாக இருந்து வருவது, மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு நிறுவனங்கள் அதிகளவு முன்வருவது தெளிவகிறது என்று தெரிவித்தார்.

  மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழு வீச்சில் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், விவசாயிகளுக்கு வங்கிகள் தாராளமான கடன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

  Also see...

  நாடு முழுவதும் ஒரே நாளில் 7964 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று, 265 பேர் உயிரிழப்பு


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vaijayanthi S
  First published: