தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட அவசர தேவை மற்றும் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மே 31-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கி கிளைகளின் வர்த்தக நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை என்பது தொடரும். வங்கி கிளைகளில் ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற வேண்டும்.
நிர்வாக, கோட்ட, மண்டல அலுவலகங்கள் வழக்கமான பணி நேரங்களில் பணியாற்றவேண்டும்.
வங்கிகள் சுழற்சி முறையில் 3-ல் ஒரு பங்கு பணியாளர்களை கொண்டு இயங்கவேண்டும்.
Also Read : வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய புதிய இணையதளம் - ஜூன் 7ம் தேதி முதல் அறிமுகம்!
பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். உள்பட பல்வேறு முறைகளில் பணம் அனுப்புதல், அரசு தொடர்பான வர்த்தகம், காசோலைகளை சரிபார்த்து வழங்குதல் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை சேவைகளை வங்கி கிளைகள் வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கொரோனா தடுப்பபு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்திஉ உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.