நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள்

ஒரே வாரத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில், 10 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா மற்றும் தேனா வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

வங்கி ஊழியர்களின் 9 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான ஒருங்கிணைந்த வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில், நாடு தழுவிய அளவில் 10,00,000 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாங்க் ஆப் பரோடா வங்கி


எனினும், தனியார் வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வங்கி அதிகாரிகள், கடந்த வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரே வாரத்தில் 2-வது முறையாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

Also see... அழிவின் விளிம்பில் நாடகக் கலை..! இலவசமாக கூட வராத மக்கள்
Published by:Vaijayanthi S
First published: