திருப்பூரில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை...

Youtube Video

திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை காரோடு சேர்த்து கயிறு கட்டி இழுத்து தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 • Share this:


  திருப்பூரில் ஊத்துக்குளி சாலையில் உள்ள கூலி பாளையம் நான்கு ரோடு அருகே பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் காவலாளி யாரும் இல்லை. இதனை அறிந்த கொள்ளையர்கள் கயிறு கட்டி இழுக்கும் வசதியுடன் கூடிய காருடன் அதிகாலையில் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றிருக்கிறார்கள். அதன்பிறகு முகமூடி அணிந்த இருவர் ஏ.டி.எம் மையத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா மீது முதலில் பெயிண்ட் ஸ்பிரே அடித்துள்ளனர்.

  அதனை தொடர்ந்து ஏ.டி.எம் இயந்திரத்தை கயிற்றால் கட்டிவிட்டு மற்றொரு முனையை காரின் பின்பக்கமாக கட்டி உள்ளனர். அதன்பிறகு காரை முன்னேக்கி நகர்த்திய போது ஏ. டி.எம் இயந்திரம், அறையிலிருந்து வெளியே வந்து விழுந்தது. அதனை தொடர்ந்து ஏ.டி.எம் இயந்திரத்தை காரில் தூக்கி போட்டுக்கொண்டு கொள்ளையார்கள் தப்பினர்.

  ஏ.டி.எம் இயந்திர கொள்ளையர்களை பிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருடப்பட்ட ஏ.டிஎம் இயந்திரத்தில் லட்சக்கணக்கில் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க... Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: