சென்னை டிபி சத்திரம் 14-வது தெருவைச் சேர்ந்தவர் சரண்யா. அண்ணாநகர் ஆக்சிஸ் வங்கியில் வேலை செய்து வந்தார். இவர் கோடம்பாக்கத்தில் வசிக்கும் ஐசக் மனோஜ்குமார் என்பவரை கடந்த ஓர் ஆண்டாகா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களுக்குள் ஏற்பட்ட மனகஷ்டம் காரணமாக சரண்யா வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறைக்குள் சென்ற சண்யா, துப்பட்டாவால் மின்விசிறியில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நடைபயிற்சிக்கு வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சரண்யாவின் தந்தை சங்கர் வீட்டிற்குள் வந்து கதவை திறந்து பார்க்கும்போது மகள் தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து டிபி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் பிரச்சினையில் இறந்து போனது தொடர்பாக டிபி சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட சரண்யா தனது காதலனுடன்
சரண்யாவும் ஐசக் மனோஜ்குமாரும் பேசிய ஆடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த ஆடியோவில் இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்தது போல பேசிய ஆடியோக்கள் கிடைத்துள்ளன. இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை போலீசார் கைப்பற்றி
உள்ளனர்.
இதனையடுத்து தற்கொலைக்கு காரணமான மனோஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். மனோஜ் குமார் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104