• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பங்காரு அடிகளாரின் மனைவி, மகன் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி

பங்காரு அடிகளாரின் மனைவி, மகன் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி

பங்காரு அடிகளார் குடும்பம்

பங்காரு அடிகளார் குடும்பம்

உள்ளாட்சித் தேர்தலில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் அவரது இளைய மகன் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.

  • Share this:
    செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை எட்டு ஒன்றியங்கள் உள்ளன . காட்டாங்குளத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், அச்சரபாக்கம் ,சித்தாமூர் , மதுராந்தகம், ஆகிய ஒன்றியங்களில் 16 மாவட்ட கவுன்சிலர் 154 ஒன்றிய கவுன்சிலர், 359 ஊராட்சி ஒன்றிய தலைவர் 2679,  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதிவுகளுக்கு இதுவரை ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2448 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட பஞ்சாயத்து வார்டு பதிவுகளுக்கு இரண்டு நபர்களும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 25 நபர்களும், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 345 நபர்களும், ஊரக வார்டு உறுப்பினர் பதவிக்கு 2076 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். இங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம்தான் இந்த ஊரின் அடையாளமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள். அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன.

    இந்தக் கோயிலுக்கு குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் , தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இக்கோவிலுக்கு வர தவறியது கிடையாது. இக்கோவிலை சுற்றி வட்டார ஊர்களில், உள்ள பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் ஆதிபராசக்தி புகைப்படத்தை தாராளமாக காணலாம். அதேபோல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மேல்மருவத்தூர் கோவிலை சார்ந்தவர்கள் இல்லாமல் நடைப்பெறுவது கிடையாது. அப்பகுதியில் பங்காரு அடிகளார் மற்றும் அவரது மகன்களான அன்பழகன் செந்தில் ஆகியோர் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

    Also Read : பிரதமராக மோடி இருக்கும்போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் மாற்று வேட்பாளராக பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக போட்டியிடும் லட்சுமி இதற்கு முன் 2 முறை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஊராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால், போட்டியிட முடியாத சூழல் உருவானது. மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாற்றி உள்ளதால், போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரை தவிர மேல்மருவத்தூர் ஊராட்சிக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இருவர் மனுக்கள் ஏற்கப்பட்டு அதில் ஒருவர் மனுக்களை திரும்பப் பெற வாய்ப்புள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: