திருப்புவனம் பகுதியில் வாழை தார், வாழை இலை விலை வீழ்ச்சி!

திருப்புவனம் பகுதியில் வாழை தார், வாழை இலை விலை வீழ்ச்சி!

வாழை தார் விலை வீழ்ச்சி

வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சுற்று வட்டார பகுதியில் கொரோனா பாதிப்பு காரணமாகவும், விழாக்கள் எதுவும் நடைபெறாத காரணத்தாலும் வாழை இலை மற்றும் வாழை தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தல், தூதை, ஏனாதி பூவந்தி, திருப்பச்சேத்தி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து உள்ளனர். இங்கு விளையும் வாழைப் பூ, வாழைத் தார் மற்றும் இலைக்கட்டு போன்றவற்றை விவசாயிகள் திருப்புவனதில் உள்ள மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாகவும், விழாக்கள் எதுவும் நடைபெறாத காரணத்தாலும் வாழை இலை தேவை குறைந்து விட்டது. இதனால் வாழை இலைகளின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டு விலை குறைந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஒரு வாழைதார் ரூ.200 லிருந்து ரூ.500 வரை விற்றது  தற்பொழுது ரூ.30 லிருந்து ரூ.200 வரை விற்பனைக்கு எடுக்கின்றனர் அதே போல் 200 இலைகள் அடங்கிய ஒரு கட்டு ரூ.800 முதல் ரூ.1500 வரை விற்பனையானது.

    இந்தநிலையில் தற்போது திருப்புவனம் மார்க்கெட்டில் 200 இலைகள் அடங்கிய ஒரு கட்டு ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். போதுமான விலை இல்லாததால் வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர் சிதம்பரநாதன் - மானாமதுரை
    Published by:Arun
    First published: