பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக வாழை இலை விலை கிடு கிடு உயர்வு...

Youtube Video

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் திண்டுக்கல் சந்தையில் வாழை இலை விலை உயர்ந்துள்ளது.

 • Share this:
  திண்டுக்கல் வத்தலகுண்டு சந்தையில் 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை 500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

  வத்தலகுண்டு வாழை இலை சந்தைக்கு நிலக்கோட்டை, செம்பட்டி, ஆத்தூர் பகுதி விவசாயிகள் விளைவிக்கும் வாழை இலைகள் கொண்டு வரப்பட்டு, மாநிலத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சரக்கு லாரி கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால், விவசாய தோட்டத்தில் இருந்து வாழை இலை கட்டுகளை சந்தைக்கு கொண்டு வர ஒரு கட்டுக்கு 20 ரூபாயாக இருந்த கட்டணம் 40 ரூபாயாகவும், சென்னைக்கு அனுப்ப 60 ரூபாயாக இருந்த கட்டணம் 100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

  மேலும் படிக்க...தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

  100 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுபமுகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் நிலையில், வாழை இலைகளின் விலை அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதே நேரத்தில் அதன் பலனை அனுபவிக்க முடியாமல் சரக்கு லாரி கட்டணம் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

  வீடியோ
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: