Home /News /tamil-nadu /

Online Games | ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமைகளாகும் இளைஞர்கள்.. தடை செய்ய முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Online Games | ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமைகளாகும் இளைஞர்கள்.. தடை செய்ய முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

Online Games | ஆன்லைன் விளையாட்டில் வெற்றி அடைபவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக விளையாட்டுத் துறையினரும், திரைப்படத் துறையினரும் விளம்பரம் செய்வதன் காரணமாக இளைஞர்கள் இதில் நாட்டம் செலுத்துகின்றனர் என கூறப்படுகிறது - ஓபிஎஸ்

  • Last Updated :
    தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டாலும் ஆன்லைன் மூலம் பல்வேறு விளையாட்டுகள் சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். சில தற்கொலை நிகழ்வுகளும் நடந்தேறின. ஃபேன்டசி, ரம்மி, லூடோ, போக்கர், கால் பிரேக் ,கேரம் என பல ஆன்லைன் விளையாட்டுகள் குறித்தும், 2000 கோடி ரூபாய் வரையில் ஜெயிக்கலாம் என்றும் பிரபல நாளிதழ்களில் முதல் பக்கத்தில் விளம்பரங்கள் கடந்த சில நாள்களாக வந்து கொண்டிருக்கின்றன.

    Also Read:  25 வயது இளம்பெண்ணை மணந்த 45 வயது நபருக்கு நேர்ந்த சோகம்!

    அந்த விளம்பரத்திலே இந்த விளையாட்டில் நிதி அபாயங்கள் உள்ளன என்றும் இது ஒரு கட்டாய பழக்கமாக மாறலாம் என்றும் தயவு செய்து பொறுப்புடனும் சுய கட்டுப்பாட்டுடனும் விளையாடவும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே இது சூதாட்டம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து, விரக்தியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் காவல் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இந்த விளையாட்டு சில மாதங்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருந்தது.

    தற்போது மேற்படி சட்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து, அதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டுவதாகவும் ஆன்லைன் விளையாட்டில் வெற்றி அடைபவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக விளையாட்டுத் துறையினரும், திரைப்படத் துறையினரும் விளம்பரம் செய்வதன் காரணமாக இளைஞர்கள் இதில் நாட்டம் செலுத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

    Also Read: காதலன் கண்முன்னே பாலியல் துன்புறுத்தல்.. காதலனை தொடர்ந்து விஷமருந்திய காதலி..

    எனவே இந்த விளையாட்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்மென்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 1968-ம் ஆண்டைய உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பினை மேற்கோள் காட்டி இந்த ஆன்லைன் விளையாட்டு சூதாட்டம் அல்ல, திறமையை வளர்க்கும் விளையாட்டு என்று மேற்படி விளையாட்டினை நடத்தும் நிறுவனங்கள் சொல்வது ஏற்றுகொள்ளத்தக்கதல்ல. இது திறன் விளையாட்டாக இருந்தாலும் இதில் உள்ள அபாயங்கள் குறித்து விளம்பரத்தில் ஏன் குறிப்பிடப்பட்டு இருக்கிறது

    இந்த நிலைமை தொடர்ந்தால் இளைஞர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பினைத் தேடுவதிலும் நாட்டம் செலுத்துவதை தவிர்த்து, இதுபோன்ற அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய நடுத்தர மக்கள்தான். இதுபோன்ற விளையாட்டு மிகவும் ஆபத்தானது.எனவே மாண்புமிகு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு ஆன்லைன் மூலம் விளையாடப்படும் ஃபேண்டஸி, லூடோ, போக்கர், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை விதிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது சூதாட்டத்தை ஒழிக்கும் வகையில் உரிய சட்டம் இயற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் “ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Addicted to Online Game, ADMK, DMK, MK Stalin, O Pannerselvam, Online rummy, Video Games

    அடுத்த செய்தி