• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சில்லறை விலையில் சமையல் எண்ணெய் விற்க தடை- உயர்நீதிமன்ற மதுரை கிளை

சில்லறை விலையில் சமையல் எண்ணெய் விற்க தடை- உயர்நீதிமன்ற மதுரை கிளை

100, 300 மி.லி என சில்லறை விலையில் சமையல் எண்ணெய் விற்பனை செய்ய தடைவிதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

  • Last Updated :
  • Share this:
    சமையலுக்கு பயண்படுத்தும் எண்ணெய்களை, 100, 300 மி.லி என சில்லறை விலையில் விற்பனை செய்ய தடைவிதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

    சமையல் எண்ணெய்களை கலப்படத்தை தடுக்கும் வகையில், சில்லறை விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உரிய சான்றிதழ் பெற்ற பாக்கொட்டில் அடைக்கப்பட்ட. சமையல் எண்ணெய் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    கலப்பட எண்ணெய்களை சமையலுக்கு பயண்படுத்துவதால் பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பத சுட்டிக் காட்டிய நீதிபதிகள், பொது மக்களின் உடல் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

    முந்திரி தோலில் தயாரித்த எண்ணெய்யை சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுவதாகவும், இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி, அருண் நித்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: