தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து வருவதோடு, அவற்றின் விற்பனையையும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இதேபோல், குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவவதால் அவற்றுக்கு தமிழ் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது, கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த தடை விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இத்தகைய போதைப்பொருட்களை, உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
இதையும் படிங்க: சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்த இளைஞர்... போக்சோவில் கைது
குட்கா, பான் மசாலா போன்ற மெல்லும் போதைப்பொருட்களுக்காக தடை கடந்த 23ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, இந்த தடையை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களின் அருகே இத்தகைய தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.