ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் ரம்மிக்கு தடை : அவசர சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்

ஆன்லைன் ரம்மிக்கு தடை : அவசர சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்

ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டு

Ban on Online Rummy : விரைவில்ஆன்லைன் விளையாட்டுகள் தடை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில், சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரிவாக ஆலோசிக்க, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், தென்கொரியா பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசுவை தவிர்த்து மற்ற அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். அதில், சட்டசபை கூட்டத்தொடர் நடவடிக்கைகள், புதிய சட்டங்கள் இயற்றுவது மற்றும் மாநில சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  குறிப்பாக, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை அறிக்கை ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஆய்வுக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: CM MK Stalin, Online rummy