ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா அச்சம்.. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடையா?

கொரோனா அச்சம்.. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடையா?

புத்தாண்டு

புத்தாண்டு

New year celebrations 2023 | தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால் இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதுபற்றி அவர், புத்தாண்டு, அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. எனினும், பொதுமக்களுக்கு சுயக்கட்டுப்பாடு என்பது அவசியம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

முன்னதாக, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Ma subramanian, New Year 2023, Tamil Nadu