முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப்ஃக்கு தடை விதிப்பதா? விசிக கண்டனம்!

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப்ஃக்கு தடை விதிப்பதா? விசிக கண்டனம்!

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப்ஃக்கு தடை விதிப்பதா? விசிக கண்டனம்!

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப்ஃக்கு தடை விதிப்பதா? விசிக கண்டனம்!

Ambur Biryani Festival | பிரியாணி திருவிழாவில் மீண்டும் மாட்டுக்கறி பிரியாணியை இணைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்ட வேண்டும் என வன்னியரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Last Updated :

ஆம்பூரில் நாளை அரசு சார்பில் நடத்தப்படும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி அனுமதிக்கப்படாவிட்டால் வளாகத்திற்கு முன்பு இலவசமாக பீப் பிரியாணி வழங்கப்படும் என விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட தலித் கூட்டமைப்பு மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் அறிவித்துள்ளன.

மனித ஒருமைப்பாட்டுக்காக ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி கடைகளையும் ஒன்று சேர்த்து பிரியாணி திருவிழாவைக் கொண்டாட திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, ஆம்பூர் வர்த்தக மையத்தில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருவிழா நடைபெறுகிறது. அதனைப்போலவே 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்றைய நாளில் பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பிரியாணி திருவிழா நடைபெற உள்ளது.

30க்கும் மேற்பட்ட அரங்குகள், 20க்கும் அதிகமான பிரியாணி வகைகள் என பிரியாணி திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. ஆம்பூர் பிரியாணி கடைகளில் பொதுவாக பீப் பிரியாணி மிக பிரபலம். ஆனால்  மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

20 வகை பிரியாணிகள் திருவிழாவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பீப் பிரியாணிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சமூக வலைதளங்களில் பீப் பிரியாணி தடை குறித்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியும் இடம்பெற வேண்டும். இந்த தடையை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே திருவிழா நடக்கும் பகுதிக்கு எதிரே மாட்டிறைச்சி பிரியாணி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வோம் என்று விசிக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஆம்பூரைச்சுற்றி தினமும் 1 லட்சத்திற்கும் மேல் மாட்டுக்கறி பிரியாணியை விரும்பி உண்ணுகிறார்கள். பெரும் வணிகம் மாட்டுக்கறிதான். அப்படி இருக்கையில் அரசு சார்பாக நடக்கும் பிரியாணி திருவிழாவில் மீண்டும் மாட்டுக்கறி பிரியாணியை இணைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

top videos

    தொடர்ந்து, திருப்பத்தூரில் அரசு சார்பில் நடத்தப்படும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறவில்லை என்றால் நடத்தப்படும் வளாகத்திற்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட தலித் கூட்டமைப்புகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சி மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு கட்சிகளும் பீப் பிரியாணி இலவசமாக வழங்கி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளன.

    First published:

    Tags: Ambur Biriyani, Beef, Briyani