• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் அதிகரிக்கும் கரும்பூஞ்சை தொற்று... கெரோனாவிலிருந்து மீளும் நீரழிவு நோயாளிகளுக்கு அதிகம் பாதிப்பு

தமிழகத்தில் அதிகரிக்கும் கரும்பூஞ்சை தொற்று... கெரோனாவிலிருந்து மீளும் நீரழிவு நோயாளிகளுக்கு அதிகம் பாதிப்பு

கோப்பு படம்

கோப்பு படம்

கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு தமிழகத்தில் பரவலாக அதிகரித்து வருகிறது.

  • Share this:
    பொதுவாக கொரோனா நோய் பாதிப்புக்கு ஆளாகும் நீரிழிவு நோயாளிகள் மீண்டு வர ஸ்டீராய்டு எனப்படும் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் எதிர்ப்பு சக்தி குறைகிறது. கொரோனாவில் இருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் சுற்றுச்சூழலில் உள்ள mucor-mycosis என்ற பூஞ்சை தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர்.

    இவ்வகை கரும்பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும்போது கண்வலி,கண் வீக்கம், பின்னர் பார்வை இழப்பு ஏற்படுகிறது. சில நோயாளிகளுக்கு மூக்கில் ரத்தம் வருதல், பின்னர் மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது.

    சென்னை மற்றும் தமிழகத்தில் வெகு சில இடங்களில் அரிதாக காணப்பட்டு வந்த இந்த பாதிப்பு , தற்போது நாடு முழுக்க கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு 10 முதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது.

    பொதுவாக எதிர்ப்பு சக்தி இருந்தால் இந்த தொற்றில் இருந்து மீண்டுவிட முடியும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு ampho-tericin B என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.. இவ்வகை மருந்து ஒரு குப்பி 5000 முதல் 6000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இந்த மருந்துக்கும் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



    கருப்பு பூஞ்சை ( Black Fungus) என்றால் என்ன?

    இந்த பூஞ்சையானது ஒரு குழுவாக இணைந்த அச்சு வடிவில் உருவாகக்கூடிய மியூகார்மைகாசிஸ். அழுகிய காய்கறிகள், பழங்கள் என சுற்றுசூழலில் எங்கும் காணக்கூடியது. இந்த மியூகார்மைகாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கள், அதிக மருந்து , மாத்திரைகளை உட்கொள்வர்களையே அதிகம் தாக்குகிறது.

    அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

    இந்த கருப்பு பூஞ்சையான மியூகார்மைகாசிஸ் பாதிக்கப்பட்டால் தலைவலி, முகத்தில் ஆங்காங்கே வலி, சுவாசப்பாதையில் அடைப்பு, கண்பார்வை இழப்பு, கண்களில் வலி, கன்னங்கள் மற்றும் கண்களில் வீக்கம், மூக்கில் கருப்பு மேலோடு போன்ற அறிகுறிகள் இருக்கும். நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தில் 54 சதவீதம் கருப்பு பூஞ்சையால் இருக்கும் என கணித்துள்ளது.

    கருப்பு பூஞ்சையின் சிகிச்சை முறை என்ன..?

    நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை நிறுத்துவதன் மூலமும், ஸ்டெராய்டுகளைக் குறைப்பதன் மூலமும், விரிவான அறுவைசிகிச்சை சிதைப்பதன் மூலமும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.

    மருத்துவ சிகிச்சையில் புறத்தில் செருகப்பட்ட மத்திய வடிகுழாயை (central catheter) நிறுவுதல், போதுமான முறையான நீரேற்றத்தை பராமரித்தல், ஆம்போடெரிசின் பி (Amphotericin B) உட்செலுத்தலுக்கு முன் சாதாரண உமிழ்நீரை உட்செலுத்துதல் மற்றும் குறைந்தது ஆறு வாரங்களுக்கு பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சை ஆகியவை நோயாளியை மருத்துவ ரீதியாக ரேடியோ இமேஜிங் மூலம் கண்காணிப்பதற்கும் நோய் முன்னேற்றத்தைக் கண்டறிவதற்கும் உதவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: