ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாலமேட்டில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு போட்டி... சீறிப்பாயும் காளைகள்

பாலமேட்டில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு போட்டி... சீறிப்பாயும் காளைகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Palamedu Jallikattu | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 430 வீரர்ர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் வருகை தந்தனர்.

  நேற்று, காளையை அடக்கியதில் இருவருக்கு முதல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று காலை 8 மணிக்கு பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. அதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது கனமழை பெய்ததால் பார்வையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

  ' isDesktop="true" id="394171" youtubeid="0v7P4Ue7c94" category="tamil-nadu">

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Jallikattu, Palamedu, Pongal 2021