பாலகுமாரனின் உடல் இன்று தகனம்

news18
Updated: May 16, 2018, 7:38 AM IST
பாலகுமாரனின் உடல் இன்று தகனம்
பாலகுமாரன் - எழுத்தாளர்
news18
Updated: May 16, 2018, 7:38 AM IST
சென்னையில் காலமான எழுத்தாளர் பாலகுமாரனின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். 71 வயதான அவர் நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி கிராமத்தில் 1946ம் ஆண்டு பிறந்தார். நூற்றுக்கணக்கில்  சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியவர். இதுதவிர நெடுங்கதைகள், கவிதைகள், கட்டுரைகளையும் படைத்துள்ளார்.

மேலும் ‘இது நம்ம ஆளு’ என்னும்  திரைப்படத்தை கே. பாக்யராஜை வைத்து இயக்கினார். பாலகுமாரனின் நாவல்களில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் மிகவும்  பிரபலமானது. பாட்ஷா, நாயகன் உள்ளிட்ட பிரபல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய  விருதுகளை அவர் பெற்றுள்ளார். பாலகுமாரனின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் உள்பட பல அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாலகுமாரனின் உடலுக்கு அமைச்சர் பாண்டியராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் பார்த்திபன், ராஜ்கிரண், சிவகார்த்திகேயன், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்