ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Bakrid 2022: தியாகத் திருநாளான பக்ரீத் இன்று கொண்டாட்டம்.. சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

Bakrid 2022: தியாகத் திருநாளான பக்ரீத் இன்று கொண்டாட்டம்.. சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

பக்ரீத்

பக்ரீத்

Eid al-Adha: பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

பக்ரீத் என்பது உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இது ரம்ஜான் கொண்டாட்டம் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு 4 நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும். தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த கொண்டாட்டம் சுல் ஹிஜ்ரா என்ற அரேபிய மாதத்தின் பத்தாவது நாள் கொண்டாடப்படுகிறது. ‘ஈத் அல்-அதா’ என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர். நாகூர் தர்காவிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் காயிதே மில்லத்திடலில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்த் செய்தியில், அமைதியான, வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் உறுதி கொள்வோம். இந்த தியாகத் திருநாளானது நம் அனைவருக்கும் அன்பின் வலிமையையும், நல்லிணக்கத்தையும், உடல்நலன், மகிழ்ச்சியையும், நமது பெரும் முயற்சிகளில் வெற்றியையும் அளிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

இதேபோல் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத்தியாகப்பெருநாளை மகிழ்ச்சியுடனும், கரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து பாதுகாப்புடனும் கொண்டாடிட வேண்டும் என தெரிவித்தார்.

First published:

Tags: Bakrid, Mosque, Muslim