• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Bakrid: ஜூலை 21ம் தேதி பக்ரீத் பண்டிகை: தலைமை ஹாஜி அறிவிப்பு!

Bakrid: ஜூலை 21ம் தேதி பக்ரீத் பண்டிகை: தலைமை ஹாஜி அறிவிப்பு!

Bakrid

Bakrid

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூலை 11) துல் ஹஜ் மாத முதல் பிறை ஷரியத் முறைப்படி தென்பட்டது.

  • Share this:
    இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை வரும் ஜூலை 21ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

    இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான பக்ரீத், உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகளைகளில் ஒன்றாகும், நபிகள் நாயகத்தின் தியாகத்தை போற்றும் வகையில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை வரும் ஜூலை 21ம் தேதி புதன் கிழமையன்று கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாஹூத்தீன் முஹம்மது ஆயூஃப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    Also Read:  பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!

    தலைமை ஹாஜி வெளியிட்ட அறிவிப்பில், “ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூலை 11) துல் ஹஜ் மாத முதல் பிறை ஷரியத் முறைப்படி தென்பட்டது. எனவே இன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருகிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத் பண்டிகை) வருகிற ஜூலை 21ம் தேதி கொண்டாடப்படும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளும் தற்போது கொடுக்கப்பட்டிருப்பதால், பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாட இஸ்லாமிய மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: