கொரொனா பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு் தடை விதித்து இருப்பதால், கேக் விற்பனை எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரொனா பெருந்தொற்று பாதிப்பினை கட்டுப்படுத்தும் விதமாக
இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இரவு நேரங்களில் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கும், ஓட்டல்கள் , ரிசார்ட்டுகளில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் அனுமதி மறுக்கபட்டுள்ளது.
இதன் காரணமாக, வழக்கமாக புத்தாண்டு கொண்டாடத்தின் போது கேக்குகள் விற்பனையாவது சற்று குறையும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களுககு அரசு விதித்துள்ள உத்திரவினை பின்பற்றி இரவு 10 மணி வரை மட்டுமே கடைகளை வைத்திருக்க போவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். வீடுகளில் வெட்டுவதற்கு வாங்கி செல்லும் கேக் வகைகள் வழக்கம் போல இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
கொரொனா பாதிப்பில் பேக்கரி தொழில் நெருக்கடியில் இருந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சமயத்தில் கேக் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்து இருந்த பேக்கரி உரிமையாளர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும் என்பதால் பேக்கரி உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.