ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிவகங்கை: கொந்தகை அகழாய்வில் இரு குழந்தைகளின் முழு உருவ எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை: கொந்தகை அகழாய்வில் இரு குழந்தைகளின் முழு உருவ எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

கொந்தகை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரு குழந்தைகளின் முழு உருவ எழும்புக் கூடுகள்.

கொந்தகை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரு குழந்தைகளின் முழு உருவ எழும்புக் கூடுகள்.

கொந்தகை அகழாய்வில் 95 செ.மீ நீளமுள்ள குழந்தையின் முழு உருவ எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நான்கு இடங்களில் நடந்தன. அவற்றுள் கொந்தகையில் நடந்து வரும் பணிகளில் முதுமக்கள் தாழிக்கள் கண்டுபிடித்த நிலையில், அதிலிருந்து எழும்புக் கூடுகள் மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இந்தச் சூழலில், இன்று மாலை மற்றொரு இடத்தில் அகழாய்வுப் பணிகள் நடந்து வந்தன. குழந்தையின் முழு எலும்புக் கூடு தெரிய வரவே, மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எலும்புக் கூட்டை சேதாரம் இல்லாமல் எடுக்க முயன்றனர். அதனால் முழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதாரம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு சுமார் 95 செ.மீ நீளம் இருந்துள்ளது.

Also see:

குழந்தையின் முழு உருவ எலும்புக் கூடான அதன் தலைப் பகுதி மட்டும் 20 செ.மீ இருப்பதாகத் தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழந்தையின் முழு எலும்புக் கூடு கிடைத்த இடத்திற்கு அருகே கடந்த ஜீன் 19ம் தேதி 75 செ.மீ நீளமுள்ள மற்றொரு குழந்தையின் எலும்புக் கூடு கண்டு எடுக்கபட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு தலைப் பகுதி மட்டும் இல்லாமல் இருந்தது. பிறகு தற்போது அதன் தலையும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எலும்புக் கூடு மரபணு சோதனைக்கு அனுப்பபடும் என்றும் சோதனையின் முடிவில் இது ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Excavation, Keezhadi, Sivagangai