ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வலியால் துடித்த கர்ப்பிணி.. கைவிரித்த மருத்துவமனை - பிரசவம் பார்த்து தாய், சேயை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்

வலியால் துடித்த கர்ப்பிணி.. கைவிரித்த மருத்துவமனை - பிரசவம் பார்த்து தாய், சேயை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்

நெல்லையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்சிலே பெண் குழந்தை பிறந்துள்ளது. இதில் தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.

நெல்லையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்சிலே பெண் குழந்தை பிறந்துள்ளது. இதில் தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.

நெல்லையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்சிலே பெண் குழந்தை பிறந்துள்ளது. இதில் தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.

 • 2 minute read
 • Last Updated :

  நெல்லையில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்து, தாயையும், சேயையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

  திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சி பட்டியை அடுத்த மாய நேரியை சேர்ந்தவர் முத்து குட்டி. விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபிராமிக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடத்தது. இவரது மனைவி அபிராமி  21 வயதான இவர் நிறைமாத கர்ப்பினியாக இருந்துள்ளார்.  இந்த நிலையில்  இன்று காலை 4 மணி அளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

  மாய நேரி கிராமத்தில்  இருந்து கணவர் முத்துகுட்டி மற்றும் உறவினர்கள் முனைஞ்சிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அபிராமியை  அழைத்து வந்தனர். அவரை பரிசோதனை செய்த  மருத்துவர் சுகன்யா இரத்த அழுத்தம் அதிகம் இருப்பதை உணர்ந்துள்ளார். அனைத்து வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருந்தும்  24 மணி நேரமும் பிரசவம் அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருந்தும் இங்கு இந்த பெண்ணிற்கு பிரசவம் பார்க்க இயலாது என உறவினர்களிடம் தெரிவித்த மருத்துவர் சுகன்யா, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வலியுறுத்தி உள்ளார்.

  உறவினர்கள் கேட்டுக் கொண்டும் அவர் பிரசவம் பார்க்க முன்வரவில்லை. இதனையடுத்து வேறு வழியின்றி நெல்லை மருத்துவமனைக்கு அழைத்து வர 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற போன் செய்து அழைத்தனர்.  மூன்றடைப்பு பகுதியில் இருந்த 108 ஆம்புலன்ஸ் துரிதமாக முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கு பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்த அபிராமியை ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி செய்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் விரைந்தது.

  Also read: பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு சைக்கிளை ஒட்டி சென்று குழந்தையை பெற்றெடுத்த பெண் எம்பி!

  ரெட்டியார்பட்டி 4 வழிச் சாலை அருகில் சிவந்திபட்டி மலை பகுதியில் வரும் போது 108 ஆம்புலன்சில் நிறைமாத கர்ப்பிணி  அபிராமிக்கு பிரசவ வலி உச்சமடைந்தது. இதனையடுத்து வாகனத்தை நடு வழியில் நிறுத்தி ஊழியர் பிரசவம் பார்த்தார். அதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருந்ததை கண்டு அவரின் உறவினர்களும் அவர் கணவா் முத்துக்குட்டியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

  மிகவும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் டெக்னீசியன் பார்வதியை அனைவரும் பாராட்டினர்.  மேலும் அழைத்தவுடன் துரிதமாக முனைஞ்சிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த ஓட்டுநர் சுடலைக்கண்ணுவிடம் உறவினர்கள் நன்றி கூறியதோடு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

  அதன் பின் தாயும் சேயும் நலமுடன் பாதுகாப்பாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர் பிரசவம் பார்க்க பயந்து மறுத்த நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர் சிறப்பாக செயல்பட்டு பிரசவம் பார்த்துள்ளார்.

  இதுகுறித்து முனஞ்சிப்பட்டி பகுதியில்  விசாரித்தபோது முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அனைத்து வசதிகளுடன் இரவு நேரத்திலும் பிரசவம் பார்க்கும் வகையில் அமைந்து உள்ளது. ஆனால் முழுமையாக இரவு நேரங்களில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

  மேலும் பெரும்பாலான பிரசவங்கள் தட்டிக்கழித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புவதில் மருத்துவர்கள் குறியாக இருப்பதாகவும் மிகக் குறைந்த அளவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்க படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

  ஆரம்ப சுகாதார நிலையம் தரப்பில் விசாரித்தபோது, கர்ப்பிணி அபிராமிக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் பிரசவம் பார்க்கும் போது பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப நேரிட்டது என தெரிவித்தனர்.

  எம்பிபிஎஸ் படித்த மருத்துவரால் முடியாததை ஆம்புலன்ஸ் பணியாளர் செய்து முடித்ததை கிராம மக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

  Also read: ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து தென் ஆஃப்ரிக்க பெண் உலக சாதனை

  First published: