பிஏ5 (BA5) வகை ஒமைக்ரான் தொற்று 4% முதல் 25.2% ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது என்றும், இதுவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணமாக இருக்கலாம் எனவும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 16,701 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 737 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 383 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும், கோயம்புத்தூரில் 42 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,62,97 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்து ஒரேநாளில் 322 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,366 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பிஏ5 என்ற ஒமைக்ரான் வகை பாதிப்பு 25% வரை தற்போது பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஆய்வுகளையும் ஆலோசனைகளையும் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தி வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் குழு பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா மூன்றாவது அலையில் நோய் பரவல் அதிகமாக காரணமாக அமைந்த ஒமைக்ரான் வகை பாதிப்புகள் தற்போது உருமாற்றம் அடைந்து இருப்பதாகவும் 8 வகையான உருமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதில் தமிழகத்தில் பிஏ5 என்ற ஒமைக்ரான் வகை பாதிப்பு 25% வரை தற்போது பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் மரபணு பகுப்பாய்வு அதிகப்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
Must Read : எடப்பாடி பழனிசாமி முகாமை நோக்கி படையெடுக்கும் நிர்வாகிகள் - காலியாகிவரும் ஓபிஎஸ் கூடாரம்
இந்நிலையில், மக்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே பிஏ5 வகை கொரோனா பரவலை தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.