தமிழக மருத்துவர்களிடம் ஆயுஷ் செயலாளர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

மருத்துவர்களிடம் ஆயுஷ் செயலாளர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்பில், 'இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்' என தமிழக மருத்துவர்களைப் பார்த்து ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கொட்டேச்சா கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

  இந்தி பேசாத மாநில மக்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படாவிட்டால், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, மத்திய அரசு இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

  மருத்துவர்களிடம் மோசமாக நடந்துகொண்ட ஆயுஷ் செயலாளர் வருத்தம் தெரிவிக்க தொடர்புடைய அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும்."

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.
  Published by:Rizwan
  First published: