நவராத்திரி விழாவின் இறுதி நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதன்படி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை இன்று கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் தொழில்வளம் பெருக தொழில் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி வழிபாடு நடத்துகின்றனர்.
இதேபோல், மாணவ, மாணவிகள் தங்களது கல்வி சிறக்க வேண்டி, நோட்டு, புத்தகங்களை வைத்து சரஸ்வதியை வழிபடுகின்றனர். இதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் பூஜைகளை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதையடுத்து, விஜயதசமி நாளை கொண்டாடப்படுகிறது.
தலைவர்கள் வாழ்த்து
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
விஜயதசமி நம் வாழ்க்கையில் புதிய உத்வேகத்தை கொடுக்கட்டும் என்றும், விடாமுயற்சியுடன் நற்பண்புகளை நிலைநிறுத்துவோம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். இந்த பண்டிகை நாட்டு மக்களுக்கு அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கட்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி
மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம், கல்வி ஆகியவை இன்றியமையாதது என்றும், இதனை போற்றி வணங்குவது நவராத்திரி பண்டிகையின் சிறப்பு என முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி திருநாட்களை கொண்டாடும் தமிழக மக்கள் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற வேண்டும் எனவும், அவர்கள் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
ஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்..
Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரும் ஆயுத பூஜை, விஜய தசமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆயுத பூஜையை ஒட்டி பழம், பொரி வாங்க சென்னை கோயம்பேடு அங்காடியில் மக்கள் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayudha poojai, Cm edappadi palanisamy, Governor Banwarilal purohit, Vijayadashmi, Wishes