நாடு முழுவதும் ஆயுதபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில்
சென்னை,
திருச்சி,
மதுரை,
திருநெல்வேலி உள்பட பல்வேறு நகரங்களில் ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழங்கள், பொரி போன்ற பொருட்களின் விற்பனை களைகட்டியது.
கடைசி நாளான நேற்று காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை இருமடங்கு அதிகரித்தது. பூஜை பொருட்களை வாங்க மக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். ஆயுதபூஜையையொட்டி வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் மக்கள் சுத்தம் செய்தனர். இறைவனுக்கு பழங்கள், பொரி உள்ளிட்ட படையலை படைத்து மக்கள் ஆயுதபூஜையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு தொழில் கூடங்கள் சுத்தம் செய்யப்பட்டு காலையிலேயே குடும்பத்துடன் வந்து பூஜை செய்து படையலிட்டு வழிபட்டனர்.
கோவையில் தொழில் கூடங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ற பொருள்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு காலையிலேயே பூஜைகள் நடத்தப்பட்டது. தொழில் கூடங்களின் உரிமையாளர்கள் காலையிலேயே குடும்பத்துடன் தொழில் கூடங்களுக்கு வந்து பூசை செய்து வழிபாடு நடத்தினர்.
கொரொனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுதபூஜை கொண்டாட்டம் முடங்கியிருந்த நிலையில் தற்போது கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக தொழில் கூடங்களில் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.பூசைகள் நடத்திய பின்னர் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் இனி திங்கட் கிழமைதான் தொழில் கூடங்களை இயக்கப்போவதாகவும் தொழில் கூடங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.