Home /News /tamil-nadu /

தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காப்போம் - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காப்போம் - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், இஸ்லாமியர்களுக்கு வேறு இடம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது.

அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், இஸ்லாமியர்களுக்கு வேறு இடம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பின் வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

450 ஆண்டுக் காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டு தலமாக இருந்த பாபர் பள்ளிவாசல் அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் நவம்பர் 9 அன்று தீர்ப்பு அளிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு 2010ல் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பை போன்றில்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் நாட்டில் நடைமுறையில் உள்ள உரிமையியல் சட்டங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அமையும் என்று நம்புகிறோம்.

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டில் அமைதி நிலவுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

பாபர் பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பைத் தந்தாலும் அமைதி காக்க வேண்டுமென அனைத்து தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சட்டத்தின் மீதும் உச்சநீதிமன்றத்தின் மீதும் முஸ்லிம் சமுதாயம் என்றும் நம்பிக்கையுடன் இருக்கின்றது. இந்த நம்பிக்கையைப் பலப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமையும் என்று முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்க்கின்றது.

தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by:Yuvaraj V
First published:

Tags: Ayodhya verdict

அடுத்த செய்தி