அயோத்தி வழக்கு : மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்!
அயோத்தி வழக்கு : மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்!
இப்ராகிம் கலிபுல்லா - ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர்- ஸ்ரீராம் பஞ்சு
அயோத்தி மத்தியஸ்தர் குழு-விற்கு இப்ராகிம் கலிபுல்லா, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பே தேர்வு
அயோத்தி பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசு நியமித்துள்ள மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றுள்ள மூவருமே தமிழர்கள் ஆவர்.
மத்தியஸ்தர் குழு-விற்கு தலைமை வகிக்கும் இப்ராகிம் கலிபுல்லா தமிழகத்தைச் சேர்ந்தவர். 1975-ல் வழக்கறிஞராக பதிவு செய்த அவர், 2000-வது ஆண்டில் உயர்நீதிமன்ற நீதிபதியானார். ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். சென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளுக்கு நடந்த தேர்தல் செல்லாது என டிவிஷன் பெஞ்சில் மாறுபட்ட தீர்ப்பை அளித்தவர்.
இவ்விவகாரம் 3-வது நீதிபதிக்கு போனபோது அவர் அதை உறுதிப்படுத்தினார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய போது கிரிக்கெட் வாரியம் தொடர்பான வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பு மாற்றங்களை தனது தீர்ப்பில் குறிப்பிட்டவர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வாழும் கலை அமைப்பின் நிறுவனர். கடந்த 25 ஆண்டுகளாக அயோத்தியில் இரு சமுதாயத்தினரிடையே சமரசம் பேசி வருபவர். 2017-ம் ஆண்டும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் முன்வைத்த 3 அம்ச கோரிக்கை ஏற்கப்படவில்லை. நிர்மோஹி அகாரா அமைப்பு இவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, சிறந்த மத்தியஸ்தராக அறியப்பட்டவர். பல்வேறு மத்தியஸ்தர்கள் அடங்கிய சமரசத்திற்கான மத்தியஸ்தர்கள் சபையை நிறுவியவர். அவர், இந்திய மத்தியஸ்தர்கள் அமைப்பின் தலைவராகவும், சர்வதேச மத்தியஸ்தர்கள் நிறுவனத்தின் நிர்வாகக்குழுவிலும் இயக்குனராகவும் உள்ளார்.
Also see... அதிமுக-வின் சுயமரியாதையை சீண்டுகிறாரா பிரேமலதா
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.